Sunday, August 14, 2011

ஜெ.ஜெ சில குறிப்புகள் - 3

நான் பொதுவாக 50+களிடம் அதிகம் உரையாடுவதில்லை,

அவர்கள் பேசுவது எனக்கு பிடிக்காது அல்லது நான் பேசுவது அவர்களுக்கு பிடிக்காது.

சில சமயம் அவர்களிடம் பேசி வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவதுண்டு, குறிப்பாக நண்பகளின் தந்தையர்களுடன் உரையாடும்
துர்பாக்கியம் சிலசமயம் வாய்த்துவிடுகிறது,

சச்சின் பேட்டிங் ஸ்டைலே தனிதான் என்னா சொல்ற

ஆமா ஆமா

கருணாநிதி மாதிரி ஒரு ராஜதந்திரி நல்ல அரசியல் வாதி பார்க்க முடியாது

ஆமா ஆமா

அமெரிக்காலாம் சுத்த வேஸ்ட்டு

ஆமா ஆமா

இப்படி எனக்கு உடன்பாடில்லாத பல விசயங்களுக்கு ஆமாஞ்சாமி சொல்ல நேரிடுவதும் அவர்களுடன் உரையாடலை தவிர்ப்பதற்கு
முக்கிய காரணிதான் என்றாலும்,

ஒரு முறை ரயில் பயணமொன்றில் அரை மணி நேரத்துக்கு முன் ஸ்நேகிதமான அரைகிழவரிடம் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு உயிரிழப்பு
ஏற்படும் நிலைக்கு சென்றதிலிருந்தே இந்த 50+ கட்டுப்பாடு.
(என்னுடன் உரையாடி அந்த 50+ அசோகமித்ரன் போல ஆஜானுபாகுவாக இருந்தார்)

இந்த முறை நான் மாட்டிக்கொண்டது நண்பனின் ரிட்டயர்ட் ஆசிரியருடன்,

அசோகமித்திரன் அளவிற்கு இல்லாமல் என் உருவத்தை ஒத்திருந்ததால் இந்த முறை சிக்கல் எனக்கே அதிகம் என்ற
உள்ளுணர்வின் காரணமாக ஆமாஞ்சாமி சொல்ல தயாராக்கி கொண்ட்டேன்,

தன்னை பார்க்க வந்த தந்தையை என்னிடம் கோர்த்துவிட்டு நண்பர் விட்டு சென்ற காரணம் எனக்கு தாமதமாகத்தான் புரிந்தது,
ஒரு தெலுங்கு பொண்ணு சாட்டில் உனக்கு வைட்டமின் கம்மியா என்று அடிக்கடி கேட்பதன் காரணம் இதுதான் என்று நினைக்கிறேன்,

தம்பிக்கு என்ன வயசு

பிப்ரவரி வந்தா 26...

என்னா படிச்சிருக்கிங்க

எஞ்சினியரிங் (டிப்ளோமாதான் இவரு என்ன கோர்டல கேசாப்போடப்போறாருனுதான் எஞ்சனியரிங்)

கல்யாணம் ஆகிடுச்சா

இன்னும் இல்லை

இதான் தம்பி சாரியான வயசு கல்யாணம் பண்ணிடுங்க ( அவ்வ்வ்)
இப்ப கல்யாணாம் பண்ணாதான் ஒரிரண்டு வருசம் களிச்சி குழந்தை பெத்துக்கலாம்,
ஒரு 29வயசுக குழந்தை பிறந்தா 58 வயசுலே ரிட்டயர்ட் ஆகிறப்ப்போ பையன்
பொறுப்பான இடத்திற்கு வந்திடுவான் புரியுதுங்களா தம்பி....

ஆமா ஆமா

கல்யாணமானவங்களுக்குள்ளே சண்டை வரதுக்குக்கு காரணம் என்னனு தெரியுமா தம்பி

ஆமா ஆமா.... ச்சே சொல்லுங்க சொல்லுங்க...

சாப்பாடுதான்,

ஓஹ்.

தமிழர்களோட பெரும்பிரச்சனயே சோறுதான், எந்த ஊருக்கு போனாலும் தமிழனை சோறு போட்டு திருப்திபடுத்தமுடியாது.

ஆமா ஆமா

நல்லா சமைசானா பாராட்டனும். நல்லா இல்லையா திட்டக்கூடாது. நான் உதவுறேன்னு கூட மாட இருந்து
ஹெல்ப் பண்ணனும் என்ன சொல்றிங்க.

ரிப்பீட்டு,,,,

தம்பி நீங்க என்ன ஆளுங்க,,,,,

50+களிடம் பேசாமலிருப்பதற்கு இன்னொருகாரணமும் உண்டு, கொஞ்சமும் தயங்காமல் எதைஎதையோ பேசிட்டு எதிர்பாரா நேரத்தில்
சாதி பெயரை கேட்டு விடுவார்கள். இதற்கு முன்பே பேசும் போது தானொரு திமுக அனுதாபி என்பதை காட்டிக்கொண்டதோடு நிறைய புத்தகங்கள் வேறு படிப்பதாக சொன்னார்.

சிக்கிரன் படிப்பிங்களா என்றதும் பகீரென்றது, எது சித்தியானந்தா பத்தி எழுதுவாங்களே அவுங்களா என்று கேட்டு தெளிவு பெற்றேன், ஆமாம் அந்த பத்திரிக்கையேதான்,

திடிரென்று என்ன ஆளுங்க என்று கேட்டவர் நீங்க வெள்ளாளக்கவுண்டரா என்று நேரடியாகெவே கேட்டுவிட்டார்,

அவரை பொறுத்தவரை வெள்ளையாகவும் மீசையும் அதுவும் வேல் படத்து சூரியா ஆஜானுபாகுவாய் அம்சமாய் அழகாய் மீசையை முறுக்கி விட்டிருந்தால் வெள்ளாளகவுண்டர்.

இல்லை இல்லை

சரவணன் சொன்னானே நம்ம சாதி பய ஒருத்தனும் எங்கூடதான் இருக்கானு சொன்னானே,
அது நீ இல்லையா,,,,,,

ம்கூம் அது நான் இல்லை




பின் குறிப்பு:

இதை போஸ்ட் செய்யும் திருமங்கலம் பொண்ணு இதை படித்துவிட்டாள். இது என்ன மூன்று வருடம் முன் எழுதியதா என்று கேட்டாள்.


பின் குறிப்பின் பின் குறிப்பு:

எதையாவது எழுதிட்டு பின் குறிப்பு எழுதுவதுதான் பின்நவீனத்துவமா என்று கோவில்பட்டி பொண்ணு கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.


-- சேரமான் வில்லன் என்ற நூலில் இருந்து---

No comments:

Post a Comment