Tuesday, May 17, 2011

ஜெ.ஜெ சில குறிப்புகள்

மீண்டும் வரலாறு காணாத வெயிலை பதிவு செய்கிறது சூரியன்.
ஒவ்வொரு முறையும் வரலாறு படைப்பதில் சூரியன் ஒரு சூப்பர் ஸ்டார், சச்சின்.

கோடையினால் எனக்கு தெரிந்த பலன்கள் கோடைவிடுமுறை (படிக்கும் காலத்தில் மட்டும்ம்ம்), மாம்பழம் மற்றும் கோசாபழம் என்கிற தர்பூசணி.

சாதாரண நாட்களில் மாதம் ஒரு பாடி ஸ்ப்ரே என்றால் கோடையில் மாதமிருமுறை. பக்கத்து அறை பாலாஜியும் பயன்படுத்தினால்
மாதம் மூன்றாகித்தொலைகிறது. பத்துவகையான தோல் வியாதிகளில் இருந்து காக்கும் குளியல் சோப்பு கோடையில் வாரம் ஒன்று தேவைபடுகிறது.

குளிர்காலங்களில் வாரயிறுதி நாட்கள் விடுமுறை என்பதாலும், வாரநாட்களில் ஒருநாளாவது எப்படியும் எழுவதற்கு தாமதமாகும் என்பதாலும் மாதம் ஒன்றுதான்.

சலவைக்கு போடப்படும் துணிகளிலும் இந்த நாட்கணக்கு வேறுபாடு நிகழவே செய்கிறது. கோடையில் பாடிஸ்ப்ரே, பெர்ப்யூம் என
உபயோகித்தாலும் ஒரு சட்டையை ஒரு நாளுக்கு மேல் உபயோகிப்பது கடினம். மீறினால் அலுவலக மக்கள் தீண்டாமை கடைபிடிக்க நேரிடலாம்.

வெயிலில் அலைவதால் வேர்க்குரு முதலான (என்னதான் ஹமாம் இருந்தாலும்) ஸ்கின் டிசிஸ் ஏற்படலாம், அதற்காக டெர்மி கூல், ஷவர் டூ ஷவர், லேட்டஸ்ட் நவரத்தனா கூல் கூல் என வாங்கிக்த்தொலைப்பது கட்டாயமாகிடுவிடும்.

அவற்றை தவிர்ப்பதற்காக விடுமுறை நாட்களை அறையிலே இருந்து களிக்க நினைத்தாலும் மதிய நேரத்தில் மின்சாரம் துண்டிப்பதால் ஏற்படும் நீராவி குளியலை தவிர்ப்பதற்காகவே அருகில் இருக்கும் எதாவது திரையரங்கிற்கு பிடித்த பிடிக்காத படம் செல்ல நேரிடுகிறது.

சென்ற வாரத்தில் ஒருநாள் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெயிலில் செல்ல நேரிட்ட்டது.

அடுத்தநாள் காலை தூக்கத்திலிருந்து எழுந்ததும் எதோ தவறு நடந்திருப்பது போல் உள்மனது சொன்னது, செல்போன், லாப்டாப், பர்ஸ் அனைத்துமிருந்தது.

அப்படியும் சம்திங் ராங் என்றபடியே இருந்தது மனது.

எதேச்சையாக கண்ணாடியை எட்டி பார்த்ததும் திடுக்கிட்டேன்.

கண்ணாடியில் வேறு யாரோ தெரிந்தார்கள், தூக்க கலக்கத்தில் பார்த்தது கண்ணாடியா இல்லை ஜன்னலா என்று சந்தேகம் ஏற்பட்டதால் மீண்டும் கண்ணாடியை நோக்கினேன். கண்ணாடியில் தெரிந்த பிம்பம் சிற்சில மாற்றங்களுடன் என்னை போலத்தான் இருந்தது.

அதே கண், அதே காது, மூக்கு, நெற்றி என எல்லாம் சரியாகத்தானிருந்தது, மேல் உதடுமட்டும் ஒருபக்கமாய் நெல்லிக்காய் சைசில் வீங்கிருந்தது.

பக்கத்து அறை தோழன் எதாவது பூச்சிகடிச்சியிருக்கும் டிடி போடனும் என ப்ரிஸ்க்ரிப்சன் சொல்லிக்கொண்டிருந்தான்.
அடுத்தவன் பல்லி உச்சா போயிருக்கும் என்று வெறுப்பேற்றினான். வேறொருவன் இரட்டையர்த்ததில் கடுப்பேற்றினான்.
மேலும் ஒருவன் குண்டூசியில் குத்தினா எல்லாம் சரியா போகும் என்றான், அடுத்தவன் செப்டிக் ஆகும் என பயமுறுத்தினான்.

மூன்று நாட்களில் அது காணாமல் போனாலும் அந்த மூன்று நாட்களில்தான் அவலட்சணம் என்பது புரிந்தது.

பேருந்துல் நெருக்கி நிற்பவர்கள் கூட ஒதுங்கியே நின்றார்கள். அவர்கள் மேல்படும் பயமாக இருந்திருக்கலாம். அல்லது க்ளோஸப் ஷாட்டில் ரசிக்க என் உதடு ஒன்றும் ஏஞ்சலினா ஜூலியில்லை என் நினைத்திருக்கலாம்.

கழுத்தில் tag மாட்டியிருந்த மென்பொருளாசாமி பேருந்தில் என்னிருக்கை அருகில் உட்கார நின்றுகொண்டே பயணித்தார்.
இத்தனைக்கும் பாடிஸ்ப்ரே தெளித்துதான் வந்திருந்தேன்.

முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஐஸ்வர்யா ராய் ஒன்று உதடு மூடமுடியாதபடி இருக்கும் என்னை கண்டு அவள் கொரித்துக்கொண்டிருந்த பதார்த்த பொட்டியை மூடிவைத்தார். நான் பங்கு கேட்பேன் என நினைதாரோ என்னவோ. இன்னொரு தப்ஸி அவர் உண்டுகொண்டிருந்த மிக்ஸ்டு ப்ரூட்டை விழுங்க முடியாமல் ஜன்னலோரமாய் வெளியேற்றினார்.

இன்னொரு சாப்ட்வேர் அஜித்குமார் எனக்கு பின்னால் நின்றவரிடம் பத்து ரூபாய் நீட்டி நந்தம்பாக்கம் ஒன்று என்றார்.

மனிதம் செத்துவிட்டது என்படியே வலப்பக்கத்து ஜன்னலோரமாக வேடிக்கைபார்த்தபடியே பயணிக்கையில் யாரோ ஒருவர் என்னருகில் வந்தமர்ந்தார். திரும்பினால் ஆசாமி எழுந்துவிடலாம் என்பதால் தலையை திருப்புதலை தவிர்த்தேன்.

நான் இறங்கும் நிறுத்தம் வந்து எழுந்த போதுதான் கவனித்தேன். அந்த ஆசாமியின் புருவங்களை காணவில்லை. தழும்புதான் இருந்தது, அய்யோ மூக்கு ஏன் இப்ப்டி உள்வாங்கியிருக்கிறது. உதடு ஏன் பிளந்துபோனது, May Be fire Accident!!

இறங்கிய பின்னும் குமட்டிக்கொண்டு வந்தது...................





(சேரமான் வில்லன் புத்தகத்திலிருந்து)













1 comment:

  1. நடை நல்லா இருக்கு வில்லன்... வாழ்த்துக்கள்

    ReplyDelete