Wednesday, November 16, 2011

ஷக்தி கொடு....

காதலிகளிடம் நேர்மையாக இருக்கிறேன் பேர்வழியென்று பார்ல இருக்கேன் என்ற மேட்டரை வெளியே சொல்லிடாதிங்க.
ஒரே ஒரு க்வார்ட்டரையும் கூட நிம்மதியாக அடிக்க முடியாது. ஜாக்கிரதை!

...................................................................................................................................................................................

ஜெஸ்ஸி ஹாசினி சாபமா?
இல்லை வேற யாரோட வயித்தெரிச்சலானு தெரியலையே?
இனிமே நான் செல்போன் யூஸ் பண்ணா சிவியர் ஆக்ஷனாமாமில்லே!

...................................................................................................................................................................................

ஷேர் ஆட்டோவில் என் எதிர் இருக்கையில் அமர்ந்த 3 பெண்களுக்கும் ஷக்தியின் பிம்பத்தை மாட்டிவிட்டு ரசித்துக்கொண்டே பயணம் செய்தேன்.

எதேச்சையாக அருகில் அமர்ந்திருந்த சக பயணியின் கண்ணை பார்த்தேன்.

உடனடியாக அந்த பெண்களிடமிருந்து ஷக்தியின் பிம்பத்தை துடைத்துவிட்டேன்!

ச்சே இந்த ஷேர் ஆட்டோல போறவங்க ஒருத்தன் பார்வையும் டீசன்டாவே இல்லை!

...................................................................................................................................................................................

ஹேய் என்னடா பண்ற, இங்க சாரல் அடிக்குது!

கதவை சாத்திக்கோ!

க்ளைமேட் ரொம்ப சில்லுனு குளிரா இருக்கு

ஸ்வெட்டர் போட்டுக்கோ!

உன்னை இப்பவே பார்க்கனும் போல இருக்கு!

அச்சச்சோ ஆபிஸ்ல இருக்கேனே

அப்படியே கட்டிப்பிடிச்சிகனும் போலிருக்கு

இரு லீவு போட முடியுதானு பார்க்கிறேன்

அப்படியே உன் மேல சாஞ்சிக்கிட்டு...

5 மினிட்ஸ்ல கிளம்பிடறேன்!

ஒன்னும் தேவையில்லை. ஐ லவ் யூ இத சொல்லதான் கூப்பிட்டேன். நைட் எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருந்தேன் டயர்டா இருக்கு. என் டெடியை கட்டிப்பிடிச்சிட்டு தூங்கப்போறேன் டாடா!

ம்ம்ம் நான் பொம்பளை டெடிபியரை கட்டிப்பிடிச்சிக்கிட்டு தூங்கினா நல்லாவா இருக்கும்!

...................................................................................................................................................................................

இடி இடிக்குதுடி

இடிக்கட்டும்

மழை பெய்துடி

பெய்யட்டும்

அது என்னை கிண்டல் பண்ற மாதிரி இருக்குடி!

ஓஹ், அதெப்படி!

உன்னை நான் மிஸ் பண்ணிட்டு இருக்கிறதை பார்த்து ஒப்பாரி வச்சு அழுதுங்க என்னைப்பார்த்து!

போடா நீயும் உன் கற்பனையும்

...................................................................................................................................................................................

உனக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும் என கேட்ட அடுத்த நொடியிலேயே நீ தான் என்றேன்.

இப்படிலாம் எப்ப பார்த்தாலும் ஜொள்ளிபைங்னா கட் பண்ணிடுவேன் என்று பயங்கரவாதம் புரிந்தாள்!

நான் பால் கோவா, குலாப் ஜாமூன் என்றேன்.

இதெல்லாம் எனக்கு எப்ப கொண்டு வந்து தரப்போற!

உனக்கு கொடுக்கப்போறேன்னு எப்போ சொன்னேன். இந்த தீபாவளிக்கு உனக்கு பிடிச்சது சாப்பிடப்போறேன்.

எனக்கு பிடிச்சது உன் இதழும் தான். அதெப்படி சாப்பிடுவ.

போடா பொறுக்கி!
அய்யோ டூயூசனுக்கு நேரமாகிடுச்சி. போன் பண்ணாத மெஸெஜ் பண்ணாத பை பை பை!

...................................................................................................................................................................................

ஏய் நேத்து நைட் என் கனவிலே வந்தே! என்றாள்
ஒரு குழந்தையின் குதூகலத்துடன்..

அய்யய்யோ நான் என்ன செஞ்சேன் கனவிலே!

ம்ம்ம் நீ ஒன்னும் செய்யலை.. நான் தான்...

நீய்ய்ய்யா!

ச்ச்சீ.. அசிங்கமா பேசாதே... நான் உன்னை பாட்டுபாடி
தூங்கவச்சேன்..

அவ்ளோதானா...

ம்ம்.. அதுக்கு முன்னாடி பாவம்னு
ஒன்னே ஒன்னு மட்டும் கொடுத்தேன்

கனவிலே மட்டும்தானா நிஜத்திலும்
நான் பாவம்தானேடி என்றதும்...

ஸ்கூலுக்கு நேரமாச்சு என்றபடியே துண்டித்துவிட்டாள்....

...................................................................................................................................................................................

நீயே என்
வானமாக இருக்கிறாய்
நீயே என் உதயமாக இருக்கிறாய்
நீயே என் அஸ்தமனமாக இருக்கிறாய்
நீயே என் ஒளியாக இருக்கிறாய்
நீயே என் இருளாக இருக்கிறாய்
நீயே என் நிலவாக இருக்கிறாய்
நீயே என் கடலாக இருக்கிறாய்

நீயே என்.......வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

கொஞ்சம் அருக்காம இருக்கியா, என்றாள் முத்தபிட்டபின்பு...

ம்ம்ம் கவிதையைப்பற்றி ஒன்னும் தெரியாத ஞான சூன்யத்தைலாம்
காதலிச்சாலும் தேவையானது கிடைக்கிறது..

...................................................................................................................................................................................

என்னடா உரையாடல்கள் தீர்ந்துடுச்சா?
மெளனமாகவே இருக்கே என்றபடியே கைக்கோர்த்து என்னைய பார்த்துக்கொண்டிருந்தாள்.

தொண்டையை தாண்டி வார்த்தைகள் வரவில்லை!

ம்ம்ம்ம் சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க!

...................................................................................................................................................................................

எதுக்குடா இத்தனை இச் வைக்கிறே செல்போன் ஈரமாகிடப்போகுது.

உன்னோட 5.5 அடி திருவுடலில் நிறைய இடமிருக்கே. எல்லாத்தையும் கவர் செய்ய வேண்டாமா!

...................................................................................................................................................................................

நான் தான் செலக்சன் செய்வேனென்று அடம்பிடித்து எனக்கேற்ற சட்டையை தேட துவங்கினாள்.

கடையை சுத்தி சுத்தி பார்த்ததில் ஒரே ஒரு பெண்தானிருந்தாள் இவளை தவிர.

விலகி தெரிந்ததை ஆர்வக்கோளாறால் வயதுகோளாறால் ஒரக்கண்ணில் ரசிப்பதை பார்த்து விட்டவள் நங்கென்று ஒரு கொட்டுவிட்டபடியே

இந்த சட்டை எப்படி இருக்கென்றாள். எதுக்கு வம்பென்று நல்லாயிருக்கென்றேன்.

பில் செய்யும் போதுதான் கவனித்தேன் சட்டையின் விலையை.

ஒழுங்கா இருந்திருந்தா காஸ்ட்லி சட்டை கிடைச்சிருக்கும்.

...................................................................................................................................................................................

தேடினியா என்று ஒரு எஸ் எம் எஸ் ஷக்தியிடமிருந்து.

அய்யய்யோ நேற்றிரவு பேசும் போது எதோ தேடித்தர சொல்லியிருக்கிறாள் போல என யோசிக்கத்தொடங்கினேன்.

எதும் நியாபகம் வரவில்லை.

இருந்தாலும் ஒரு சேப்டிக்கு வெயிட் தேடிக்கிட்டு இருக்கேன் கிடைச்சதும் சொல்றேன் என்றேன்!

உடனடியாக போன் அவளிடமிருந்து. பதறி பவ்யமாக எடுத்து பேசினேன்.

பேசியப்பின்தான் புரிந்தது.

நான் ஒவ்வொரு இரவும் உன்னுடனே இருப்பது போலவே நினைத்துக்கொள்வேன். கனவில் நீ வருவாய், விடிந்ததும் பதறிப்போவேன். நீ அருகில் இல்லையென்று தேடுவேன், பிறகுதான் அது ஒரு கனவென்றுணர்வேன் என ஒரு பிட்டு போட்டிருந்தேன்.

அதைத்தான் கேட்டிருக்கிறாள் இன்னொசன்ட் கேர்ள்!

...................................................................................................................................................................................

ஷக்தியின் கேட்கும் திறன் அசாத்தியமானது.

பேசிக்கொண்டிருக்கும் போது என்னடா இந்த 2 மணிக்கு காகா சத்தம் வருது என்பாள். நான்கு பில்டிங் தள்ளி காகா பறந்துக்கொண்டிருக்கும்.

அடுத்து என்னடா கொர கொர சத்தம் என்பாள். மாடியிலிருந்து கீழே ஒடிப்போய் டிவியை அணைத்துவிட்டு வருவேன்.

பிறகு அந்த மோட்டார் சத்தத்தை நிறுத்திறியா என்று டென்சனாவாள். ஏய் அது தெரு முக்கு வீட்டுல இருந்துடி என்றதும் தான் அமைதியாவாள்.

ஆனால் பேச்சிக்கிடையே கொடுக்கு இச்ச் சத்தம் மட்டும் கேட்காது.
கேட்டிச்சா என்று கேட்டாலும் சிணுங்கி கொண்டே போடா ஒன்னும் கேட்கலை, நாளைக்கு ஸ்கூல்ல இன்ஸ்பெக்ஷன் தூங்கனும் என்றபடியே கட் செய்வாள்!

...................................................................................................................................................................................

நேத்து ஒரு கனவுடி

அய்யய்யோ என்ன பண்ணித்தொலைச்ச என்னை

ஷ்ஷ்ஷ்... கேளு.. கலவி முடிந்து நீ ஓரமாய்
ஒருக்களித்து படுத்துக்கொண்டிருக்கிறாய்.
நான் உன்னையவே ரசித்துக்கொண்டிருக்கிறேன்.
பின் மெதுவா உன் அருகினில் வந்து உன் காதோரமாக
சிக்கியிருக்கும் கூந்தலை எடுத்துவிட்டபடியே
உன் காதுமடலை முத்தமிடுகிறேன்..
குழந்தைகள் கை விரலை கைப்பற்றிக்கொள்ளுவதுபோல
நம்பிக்கையாக என் விரலை பிடித்துக்கொள்கிறாய்.
என் முகத்தில் எதோ இனம்புரியாத பெருமிதம்

ம்ம்ம் எல்லாம் சரி கலவினு சொன்னியே அப்படின்னா என்ன?

(இந்த மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல தமிழ்லாம் சொல்லித்தரமாட்டாங்களா)

...................................................................................................................................................................................

கிடைக்கும் தனிமைகளை
முத்தமாக்க முயல்கிறேன், அனுமதிக்கிறாள்.
அனுமதிக்குப்பின் எல்லை மீற
எத்தனிக்கிறேன், தடைபோடுகிறாள்..
கடலில் இறங்காவிடினும்
கரையில் கால் நனைக்கும்
குதூகலத்துடனே விலகி நிற்கின்றேன்

...................................................................................................................................................................................

யாராவது தெரிந்தவர்கள் இருப்பார்கள்
என்ற பதட்டம் உன் கைகளின் வழியாக
நான் உணர்ந்தே இருந்தாலும்
எதாவது காதில் ரகசியம் சொல்லும் போதா
டக்கென்று திரும்பித்தொலைப்பாய்!
அரையடி தூரத்தில் தவறவிடும்
முத்தத்தைக் கண்டு இதயம்
இரண்டு விநாடி துடிக்க மறந்துவிட்டது

...................................................................................................................................................................................

இரண்டு மணிக்கு முன் தூங்கப்போக வேண்டுமென்றால் ஷக்தியிடம் பத்து
மணிக்கே பெர்மிஷன் வாங்க வேண்டும்.

நாலைந்து முறை திட்டிய பின்பு பெர்மிஷன் கிராண்டட் ஆகும்.
பெர்மிசனே கேட்காமல் பேசிக்கொண்டிருக்கையிலேயே1.30மணிக்கு தூங்கினால் 20,
30 முறை ஹிஸ்ட்ரியாக்காரியாக திட்டுகிறாள் அடுத்த நாள்.

உன்னிடம் பேசாமல் உன்னை அவாய்ட் செய்தால் என்ன பண்ணுவ என்று டீஸ் செய்ய
சும்மா தான் கேட்டேன்!

கொஞ்ச நேரம் சைலன்ட். அப்புறம் ஒரு விசும்பல் சத்தம்.

ஓஹ் மை காட் இந்த மழை காலத்துல எனக்கு எந்த நோய் நொடியையும் கொடுக்காதே!

ஷக்தி அழுதால் என்னால் தாங்க முடியாது!

...................................................................................................................................................................................

காலையில் நல்ல மழை...
குளிரில் நடுங்கியபடியே அலுவலகத்துக்கு
தயாராகிக்கொண்டிருந்தேன்...

அப்போ ஷக்தியிடம் இருந்து போன்..
ஸ்கூல் இன்னிக்கு லீவாம்,
இன்னும் பெட்ல இருந்து எழாமலே
ப்ளாங்கட்ட்க்குள்ளேயிருந்து
பேசிக்கொண்டிருப்பதாய்
சொன்னாள்...

என் நேரம்... ப்ளாங்கெட்லாம்
எனக்கு எனிமியாகிறது!

...................................................................................................................................................................................

ஷக்தியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது
மழையை சபித்தேன் சிற்சிலக்காரணங்களினால்
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதினால்.

உடனே கோபித்துக்கொண்டாள்.

அவளைப்பொருத்தவரை மழை ஒரு Good Conductor.
என் நினைவுகளை அவளுக்கும்
அவள் நினைவுகளை எனக்கும்
பரஸ்பரம் கடத்திச்செல்வது
மழைதான் என்று தீர்மானமாக சொன்னாள்...

எப்பவும் போல இதுக்கும் ஆமாம்சாமி போட்டிருக்கலாம்.

ம்ம் உங்க வீட்டுல வாஷிங் மெஷின் இருக்கு..
அதான் இப்படிலாம் பேசுறேனுட்டேன்..

அப்புறம்.... அப்புறமென்ன வாரயிறுதி நாட்களின்
வழக்கத்துக்கு மாறாக 3 மணிக்கே தூங்கப்போறேன்.
அவ்ளோதான்....

...................................................................................................................................................................................

காலையில் சரக்கடித்தபின் அப்படி இப்படி நேரம் போக்கிய பின் மதியம் ஒரு மணி நேரம் தூங்கிவிட்டேன்....

1.30 மணிக்கு ஷக்தியிடமிருந்து போன் மதுரவாயல் வா வென்று...

ஹிமாலயாஸ் டூத் பேஸ்ட்ல பல் விளக்கியபின், KS பெர்ப்யூமை கண்டபடி உடம்பில் போட்டுக்கொண்டு பிறகு புதின் ஹாரா இரண்டை வாயில் போட்டு மென்று இரண்டு நிமிடம் கொப்பளித்து பின் கிளம்பினேன்...

என்னைப்பார்த்ததுமே, பொய் சொல்லாம சொல்லு தண்ணியடிச்சதானே என்கிறாள்...

என்னென்னமோ சொல்லி சமாளிக்கப்பார்த்தும் ம்ஹூம்...

பொய் சொல்ல நிறைய மனோதைரியம் வேண்டும்....

...................................................................................................................................................................................

கேகே நகரில் இருந்து மதுரவாயல் செல்ல பேருந்தில் சாதாரணமாக 45 நிமிடமாகும்....

ஷக்தியுடன் பயணிக்கும் போதுமட்டும் அசாதரணமாக 5 நிமிடத்தில் சென்றடைகிறது....

...................................................................................................................................................................................

அது ஒரு கனவு போலவே இல்லை...
நடந்து முடிந்த ஒன்றை அசைப்போடுவதைப்போலவே
முழுமையாக இருந்தது...
ஒரு வெற்றி வீரனின் களிப்புடன் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தபடியே
புகைத்துக்கொண்டிருந்தாய்.
சற்று முன் தான் அதிர்ந்து அடங்கிய அசதி என் காலில் தொடங்கி
இதய கூடுவரை பரவியிருந்தது..
உன்னுடன் பகிர்ந்து கொண்ட நிர்வாணத்தை நீல நிற ப்ளாங்கெட்டால்
மறைத்துக்கொண்டே உனது எதிர்ப்புறமாக நான்..
கலைந்திருந்த என் கூந்தலை உனது விரல்களால் கோதிக்கொண்டே
என் காதுமடல்களில் முத்தமிடுகிறாய்.
அந்த முத்தத்தின் மெல்லிய ஈரமும், நிகோடினின் மணமும்
என்னை மீண்டும் முறுக்கேற்ற, இறுக்கமாக போர்த்திக்கொள்கிறேன்.....
அவள் மடலின் இந்த பகுதியை மட்டும் மீண்டும்
மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
கடிதத்தின் முந்த்தைய வரிகள் ஒரு குழந்தையின் இரவு நேரத்து உளறல்களை
கேட்பதுபோல் என்ன சொல்லுகிறாள் என்று புரியாவிட்டாலும்
ரசித்துக்கொண்டிருப்பேன்.
பின் பாதி சுயமுன்னேற்ற புத்தகத்திலிருந்து உருவிப்போட்டது போன்ற
வரிகளும், கிழவித்தனமான போதனைகளும் சிதறிகிடக்கும்,
ஒரு விருப்பமான சிறுகதையை படிப்பதுப்போல அவளது
இந்த கடிதத்தை திரும்ப திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
இது உண்மையாகவே எதாவது எழுத்தாளரால் எழுதப்பட்ட
சிறுகதையாக் இருந்திருந்தால் குப்பைக்கு சென்றிருக்கும்.
அதில் எழுதப்பட்டிருப்பது என்னைப்பற்றி என்ற ஒரு
காரணமே அந்த கடிதம் எனக்கு ஒரு இலக்கியதரத்தை
கொண்டிருப்பதாக தோன்றியது.

(ஜெ ஜெ சில குறிப்புகள் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி)

...................................................................................................................................................................................

ஷக்தி கோபமும் சென்னையின் சீஷோஷணமும் நேர் விகிதத்தில் அமைந்திருக்கிறது.

அவள் காதலை பொழிந்தாள் அது மார்கழி பனிகாலமாகவும் கார்த்திகை மழைகாலமாகயிருக்கிறது.

கோபப்பட்டாள் வெயில்காலமாக இருக்கிறது.

சென்னையில் வருடத்தின் பெரும்பகுதி வெயில்காலமாக இருப்பது
சென்னையின் துர்திருஷ்டம் மட்டும் அல்ல..

...................................................................................................................................................................................

உனக்கு நினைவிருக்கிறதா?

எது?

நாம போன முதல் படம். இந்திபடம்.

ம்ம்ம். 3 இடியட்ஸ்..

ஓஹ். பேர் தெரியாது, ஆனால் உன் கைப்பிடித்துக்கொண்டே
பார்த்தது மட்டும்தான் நியாபகமிருக்கிறது..

என்ன ரொமான்ஸா... நான் உன்மேலே கோபமா இருக்கேன் இப்போ...

கோபமாக உரையாடுதலை விட வெறுப்புடன் உரையாடுதல்
கொடுமையானது.. தண்ணீரில் மூழ்கடித்துப்பின் எழுப்பி மூழ்கடிக்கும்
கொடுமைக்கு சமமானது...

So What....

அந்த படத்தில் உன் கோர்த்துக்கொண்டு பார்க்கையில் காதல்காட்சிகளில் ஒரு வித இதமான குளுமையையும் கைகளில் நீ சிரிக்கையில் மெலிதான குளுமையும் பரவிக்கொண்டிருந்தது..
அந்த பிரசவ காட்சியில் உனது விரல்கள் என்னை படப்படப்புடன் பற்றிக்கொண்டன.. அப்போது பரவிய உஷ்ணம் இனம்புரியாததாக இருந்தது. அநேகமாக அது கருவறையின் கதகதப்பை கொண்டிருந்திருக்கலாம்.

என்ன சொல்ல வர இப்போ...

நான் உன்னைக் காதலிக்கிறேன்!

No comments:

Post a Comment