Sunday, November 27, 2011

ஷக்தி கொடு....2

எப்போதும் போல் ஷக்தியுடனான
உரையாடலின் போது மழை
பெய்யத்தொடங்கியிருந்தது

மழையையும் அவளின் குரலையும்
ரசித்துக்கொண்டிருக்கையில்
திடிரென குரல் தடைபட்டது...

ரீ டயலிங்ங்ங்....

ம்கூம் நாட் ரீச்சபிள்....

ஒரு மணி நேரத்திற்கு பின்
லேண்ட் லைனிலிருந்து தொடர்புகொண்டாள்
அப்போதுதான் தடையின் காரணம் புரிந்தது

பேசிக்கொண்டிருக்கையில்
என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்றாள்

நான் மழையை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறேன் என்றேன்...

உடனே மழையுடன் சண்டைப்பிடிக்க
சென்றுவிட்டிருக்கிறாள், முழுக்க நனைந்ததில் செல்போனும்
நனைந்து, பழுதாகிப்போய்விட்டது....

ஏன் தான் இந்த பொண்ணுங்களெல்லாம் ஹால்ப் மைண்டாவே இருக்காங்களோ

***************************************************************************************************************

இடியட் எனும் போதெல்லாம்
ஐ லவ் யூ சொல்லுவேன்...

இரவு 11லிருந்து இதுவரை 10-20முறை
இடியட் எனச்சொல்லிவிட்டாள்...

ரூம் மேட் இன்னும் முழிச்சிட்டு
இருக்கான். கூச்சமா இருக்கு...

அவனுக்கு சீக்கிரம் அமெரிக்காவிலே
வேலை கிடைச்சி இந்தியாவை
விட்டு ஓடனும்னு ஆண்டவனை
ப்ராத்திக்கிறேன்.....

************************************************************************************************************

ஞாபகம் ஒரு சாத்தான்!
எனது தனிமைகளை அது
அபகரித்துக்கொள்கின்றன.
அவற்றிலிருந்து விடுபட
அனைத்தையும் மறக்க எத்தனிக்கிறேன்
என்னை உட்பட!

*************************************************************************************************************

இனிமேல் இரவு ஷக்தியோடு செல்போனில் பேசிக்கொண்டேமொட்டைமாடிக்கு போக கூடாதென முடிவு செய்துள்ளேன்!

ஷக்தி பேசுவதே பாடுவது போன்று இனிமையாக இருப்பதால், தாலாட்டு கேட்டது போல் தூக்கம் வந்துவிடுகிறது!

இப்படிதான் நேற்று மாடியிலேயே தூங்கிப்போயிட்டேன்!
பனியால் ஜல்ப் பிடிச்சிகிச்சு!

************************************************************************************************************

ஏற்கனவே கேட்டதுதான் என்றாலும் மூன்று வேளை பல் துலக்குவாய் என்ற வரிகளை படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது...

ஷக்தியுடனான எனது முதல் டேட்டிங்கிற்காக செல்லும் போது இரண்டு முறை பல் துலக்கிய பின்பு இரண்டு ட்ராப்ஸ் டெட்டாலில் வாய் கொப்பளித்தேன்... பிறகு அந்த வாசனை வராமலிருக்க மீண்டும் ஒரு முறை பல் துலக்கினேன்....

இருந்தும் ஒரு டவுட்.. புதின் ஹாரா மிண்ட் ஒன்றை வாயில் போட்டுக்கொண்டு கொப்பளித்த பின்பே அவளை சந்தித்தேன்.......

:)





************************************************************************************************************


என்ன பண்ணிட்டு இருக்க

எனக்குத்தெரியும் இந்த செகண்ட் கூட நீ என்னத்தான் நினைச்சிட்டு இருப்பேனு.

எனக்கு உன்னை பார்த்துக்கிட்டே இருக்கனும் போல இருக்கு
உன் கூட பேசிக்கிட்டே இருக்கனும் போல இருக்கு
உன்னை ரொம்ப நெருங்கி வரணும்னு ஆசையா இருக்கு....

இது எதுவுமே நமக்குள்ளே நடக்காது..

நான் சின்ன சின்னதா ஆசைப்பட்ட எல்லாத்தையும்
உன்னோட வார்த்தைகளில் பார்க்கும் போது
ரொம்ப சந்தோசமா இருக்கு...

நீ எனக்காக பண்ற எல்லா விசயங்களையும்
ஒரு பெட்டகத்துல அடைச்சி வச்சிக்கனும் போலிருக்கு...

என்னோட வாழ்க்கையோட கடைசி கட்டத்துல அந்த
பெட்டகத்தை திறந்து பார்த்து எனக்காக இருந்த பைத்தியக்காரன்னு
உன்னை நினைச்சிப்பார்க்கனும் போலிருக்கு....

நான் ரொம்ப விரும்பற சில விசயங்கள நீயும் விரும்பிக்கிட்டு இருக்க

கடலலை, காற்று, மழை,

இதெல்லாம் சில பேருக்கு நின்னு பார்க்க கூட பிடிக்காத விசயங்கள்.
ஆனா இதுக்கூடலாம்தான் இந்த பைத்தியம் வாழ்ந்துக்கிட்டு இருக்கு.

கொஞ்ச நேரம் பேசினாலே எதோ உளர்றேன்னு எல்லாரும் ஓடிடுவாங்க
இத்தனை நாள் பேசிய பின்னாடியும் உனக்கு அந்த நினைப்பு தோணலை!!!

ம்ம்ம் எத்தனை விசயங்கள் பேசினாலும் கடைசியா நீ சொல்ற வார்த்தை
எனக்கு நீ வேண்டும்...

எத்தனை விசயங்கள் நீ எனக்காக பண்ணினாலும் கடைசியா நான் சொல்ற வார்த்தை
உனக்கு நான் இல்லைங்கிறது.

நீ கேட்டதை கொடுக்க முடியாமலே போனாலும் நாம ஒரு வெற்றிப்பெற்ற
காதலர்களாகவே நாம நம்மளை எல்லாருக்கும் தெரியப்படுத்திக்கலாம்.
இதை எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இல்லாம பெருமையா கர்வத்தோட சொல்லிக்கிறேன்.

ம்ம்ம்

பை....

என்ன பேசனும்னு தெரியலை... எதாவது பேசு

நீ சைலண்டா இருந்தா பயமா இருக்கு

ஹலோ.................

(ஷக்தி பேச பேச டைப்ப் பண்ணிட்டேன்)

******************************************************************************************************


பனியிரவு மொட்டைமாடியில்
ஷக்தியுடன் பேசிக்கொண்டிருக்கையில்
நிலவை காணவில்லை
ஷக்தியுடம் முறையிட்டேன்..

ஏய் நிலாவே வா என்றாள்
குழந்தையைப்போல

மேகத்தை பிளந்துக்கொண்டு
நிலவு வெளியே வந்துவிட்டது...

அவளை கொஞ்சுவதை நிறுத்திவிட்டு
நிலவை வர்ணிக்கத்துவங்கினேன்.

கடுப்பாகிப்போனவள் ஏய் நிலவே போ என்றாள்
ஒரு சூனியக்காரியின் குரலில்...

ஆச்சர்யம் நிலவு மீண்டும்
மேகத்தில் புதைந்து விட்டது...

ஓம் ஷக்தி...

**********************************************************************************************************

உனக்கு நினைவிருக்கிறதா?

எது?

நாம போன முதல் படம். இந்திபடம்.

ம்ம்ம். 3 இடியட்ஸ்..

ஓஹ். பேர் தெரியாது, ஆனால் உன் கைப்பிடித்துக்கொண்டே
பார்த்தது மட்டும்தான் நியாபகமிருக்கிறது..

என்ன ரொமான்ஸா... நான் உன்மேலே கோபமா இருக்கேன் இப்போ...

கோபமாக உரையாடுதலை விட வெறுப்புடன் உரையாடுதல்
கொடுமையானது.. தண்ணீரில் மூழ்கடித்துப்பின் எழுப்பி மூழ்கடிக்கும்
கொடுமைக்கு சமமானது...

So What....

அந்த படத்தில் உன் கோர்த்துக்கொண்டு பார்க்கையில் காதல்காட்சிகளில் ஒரு வித இதமான குளுமையையும் கைகளில் நீ சிரிக்கையில் மெலிதான குளுமையும் பரவிக்கொண்டிருந்தது..
அந்த பிரசவ காட்சியில் உனது விரல்கள் என்னை படப்படப்புடன் பற்றிக்கொண்டன.. அப்போது பரவிய உஷ்ணம் இனம்புரியாததாக இருந்தது. அநேகமாக அது கருவறையின் கதகதப்பை கொண்டிருந்திருக்கலாம்.

என்ன சொல்ல வர இப்போ...

நான் உன்னைக் காதலிக்கிறேன்!

(என்னாலையே முடியலையே... )

******************************************************************************************************

என்னுடன் நீ இருந்த பொழுதுகளை நினைவுகள் பிரதியெடுத்து என்னுடன் உலவவிடுகின்றது...


******************************************************************************************************

ஷக்தி கோபமும் சென்னையின் சீஷோஷணமும் நேர் விகிதத்தில் அமைந்திருக்கிறது.

அவள் காதலை பொழிந்தாள் அது மார்கழி பனிகாலமாகவும் கார்த்திகை மழைகாலமாகயிருக்கிறது.

கோபப்பட்டாள் வெயில்காலமாக இருக்கிறது.

சென்னையில் வருடத்தின் பெரும்பகுதி வெயில்காலமாக இருப்பது
சென்னையின் துர்திருஷ்டம் மட்டும் அல்ல....

******************************************************************************************************

போன் வரலையே என்று புலம்பலுடன் இந்த சமயத்தில் திடிரென்று சக்தியிடமிருந்து அழைப்பு..

உதயம்ல இருக்கேன் நீ எங்கே இருக்கே என்று...

எப்படியோ அடிச்சிப்பிடிச்சி வந்து உதயம் சேர்ந்த பின் ஏழாம் அறிவு சினிமா போனோம்.

பக்கத்திலிருந்த பக்கிகளெல்லாம் பெ என்று பார்த்த காரணத்தினால் சிற்சிலவைகள் மிஸ்ஸாகிப்போச்சி...

சீக்கிரம் வீட்டுக்கு போகனும் என்பதால் இண்டெர்வெல்லில் கிளம்பிவிட்டாள்.

உங்கூட இருக்கிறதுக்காக நான் சாகறளவுக்கு ரிஸ்க் எடுக்கத்தயாரென்று பிட்டு போட்டது பெரிய தப்பாகிப்போச்சி...

அடுத்தவாட்டி ஏழாம் அறிவை தவிர எவ்வளவு பெரிய ரிஸ்க் வேணும்னாலும் எடுக்கறேன்னு சொல்லனும்

******************************************************************************************************
அலுவல் நேரத்தில் கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதே என்பதை எப்படி புரிந்துக்கொண்டாளோ தெரியவில்லை. ஒரு வாரமாக காலையிலும் அழைப்பதில்லை மாலையிலும் அழைப்பதில்லை இரவிலும் (யோவ் தொலைப்பேசி அழைப்புய்யா) அழைப்பதில்லை.

காலையிலே இருந்து சுமார் 218 முறை பாக்கெட்ல இருந்து செல்போனை எடுத்துப்பார்த்துட்டேன். ஒரு எஸ் எம் எஸ் ஒரு மிஸ்ட் கால் கூட வரலை..

டெலிகாலர்களிடமிருந்தும் அழைப்பு இல்லை...

இது போன்ற தருணங்களில் ஆள் அரவமற்ற பாலையில் தாகத்துடன் அழைபவன் போல தவித்துக்கொண்டிருக்கிறேன்....

வாழ்வான வாழ்வெனக்கு
வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாடிதென்று
பார்த்தவர்கள் கூறவில்லை

தேனாகப் பேசியதும்
சிரித்து விளையாடியதும்
தேனாகப் பேசியதும்
சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகும் என்று
யாரேனும் நினைக்கவில்லை

******************************************************************************************************

காலையில் சரக்கடித்தபின் அப்படி இப்படி நேரம் போக்கிய பின் மதியம் ஒரு மணி நேரம் தூங்கிவிட்டேன்....

1.30 மணிக்கு ஷக்தியிடமிருந்து போன் மதுரவாயல் வா வென்று...

ஹிமாலயாஸ் டூத் பேஸ்ட்ல பல் விளக்கியபின், KS பெர்ப்யூமை கண்டபடி உடம்பில் போட்டுக்கொண்டு பிறகு புதின் ஹாரா இரண்டை வாயில் போட்டு மென்று இரண்டு நிமிடம் கொப்பளித்து பின் கிளம்பினேன்...

என்னைப்பார்த்ததுமே, பொய் சொல்லாம சொல்லு தண்ணியடிச்சதானே என்கிறாள்...

என்னென்னமோ சொல்லி சமாளிக்கப்பார்த்தும் ம்ஹூம்...

பொய் சொல்ல நிறைய மனோதைரியம் வேண்டும்....

No comments:

Post a Comment