Sunday, November 27, 2011

ஷக்தி கொடு....3

ஷக்தியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது
மழையை சபித்தேன் சிற்சிலக்காரணங்களினால்
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதினால்.

உடனே கோபித்துக்கொண்டாள்.

அவளைப்பொருத்தவரை மழை ஒரு Good Conductor.
என் நினைவுகளை அவளுக்கும்
அவள் நினைவுகளை எனக்கும்
பரஸ்பரம் கடத்திச்செல்வது
மழைதான் என்று தீர்மானமாக சொன்னாள்...

எப்பவும் போல இதுக்கும் ஆமாம்சாமி போட்டிருக்கலாம்.

ம்ம் உங்க வீட்டுல வாஷிங் மெஷின் இருக்கு..
அதான் இப்படிலாம் பேசுறேனுட்டேன்..

அப்புறம்.... அப்புறமென்ன வாரயிறுதி நாட்களின்
வழக்கத்துக்கு மாறாக 3 மணிக்கே தூங்கப்போறேன்.
அவ்ளோதான்....

******************************************************************************************************

நீ பேசினா அழகா இருக்கே
நீ பாடினா அழகா இருக்கே
நீ நடந்தா அழகா இருக்கே
நீ வெட்கப்பட்டா அழகா இருக்கே
நீ சிரிச்சா அழகா இருக்கே
நீ தூங்கும் போதும் அழகா இருக்கே

இப்படினு பல பிட்டு இருக்கு. அதைவிட்டுட்டு
எப்பவாச்சும் கோபமா இருக்க காதலியிடம்
நீ கோபப்பட்டா அழகா இருக்கேனு மட்டும் பிட்டு
போட்டிடாதீங்க.

10,20 தடவ கால் செய்து முழு ரிங் போயும் எடுக்கலைனா
பேஜாராவுது......

பொதுநலன் கருதிவெளிட்டவர்
வில்லன்

******************************************************************************************************

இரண்டு மணிக்கு முன் தூங்கப்போக வேண்டுமென்றால் ஷக்தியிடம் பத்து மணிக்கே பெர்மிஷன் வாங்க வேண்டும். நாலைந்து முறை திட்டிய பின்பு பெர்மிஷன் கிராண்டட் ஆகும்.
பெர்மிசனே கேட்காமல் பேசிக்கொண்டிருக்கையிலேயே1.30மணிக்கு தூங்கினால் 20, 30 முறை ஹிஸ்ட்ரியாக்காரியாக திட்டுகிறாள் அடுத்த நாள்.

உன்னிடம் பேசாமல் உன்னை அவாய்ட் செய்தால் என்ன பண்ணுவ என்று டீஸ் சும்மா தான் கேட்டேன்!

கொஞ்ச நேரம் சைலன்ட். அப்புறம் ஒரு விசும்பல் சத்தம்.

ஓஹ் மை காட் இந்த மழை காலத்துல எனக்கு எந்த நோய் நொடியையும் கொடுக்காதே!

ஷக்தி அழுதால் என்னால் தாங்க முடியாது!

******************************************************************************************************

பேருந்தில் பயணம் செய்யும் போது
தோளில் சாயக்கூடாது, காதை கடிக்க கூடாது, தோளில் கைப்போடக்கூடாது, முத்தம் கொடுக்க முயற்சிக்க கூடாது, இடுப்பிலே கை ம்ஹும். இதெல்லாம் மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணினா என்னுடன் பேருந்தில் வருவதாக கூறினாள் ஷக்தி!

நான் கொஞ்சமும் யோசிக்காமல் பிள்ளையார் மேல ப்ராமிஸ் பண்ணிட்டேன்!

பாவம் பிள்ளையார்!

******************************************************************************************************

கிடைக்கும் தனிமைகளை
முத்தமாக்க முயல்கிறேன், அனுமதிக்கிறாள்.
அனுமதிக்குப்பின் எல்லை மீற
எத்தனிக்கிறேன், தடைபோடுகிறாள்..
கடலில் இறங்காவிடினும்
கரையில் கால் நனைக்கும்
குதூகலத்துடனே விலகி நிற்கின்றேன்

******************************************************************************************************

நேத்து ஒரு கனவுடி

அய்யய்யோ என்ன பண்ணித்தொலைச்ச என்னை

ஷ்ஷ்ஷ்... கேளு.. கலவி முடிந்து நீ ஓரமாய்
ஒருக்களித்து படுத்துக்கொண்டிருக்கிறாய்.
நான் உன்னையவே ரசித்துக்கொண்டிருக்கிறேன்.
பின் மெதுவா உன் அருகினில் வந்து உன் காதோரமாக
சிக்கியிருக்கும் கூந்தலை எடுத்துவிட்டபடியே
உன் காதுமடலை முத்தமிடுகிறேன்..
குழந்தைகள் கை விரலை கைப்பற்றிக்கொள்ளுவதுபோல
நம்பிக்கையாக என் விரலை பிடித்துக்கொள்கிறாய்.
என் முகத்தில் எதோ இனம்புரியாத பெருமிதம்

ம்ம்ம் எல்லாம் சரி கலவினு சொன்னியே அப்படின்னா என்ன?

(இந்த மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல தமிழ்லாம் சொல்லித்தரமாட்டாங்களா)

******************************************************************************************************

அதிகாலை பால் வாங்க கிளம்புகையில்

பல் விளக்காம சர்க்கரை சாப்பிடாதே எனும்

அன்னையிடம் எப்படி விளக்குவது,

தெருமுனையில் நிகழப்போகும்

அவளின் இதழ் யுத்தத்தை....

******************************************************************************************************

ஷக்தியின் கேட்கும் திறன் அசாத்தியமானது.

பேசிக்கொண்டிருக்கும் போது என்னடா இந்த 2 மணிக்கு காகா சத்தம் வருது என்பாள். நான்கு பில்டிங் தள்ளி காகா பறந்துக்கொண்டிருக்கும்.

அடுத்து என்னடா கொர கொர சத்தம் என்பாள். மாடியிலிருந்து கீழே ஒடிப்போய் டிவியை அணைத்துவிட்டு வருவேன்.

பிறகு அந்த மோட்டார் சத்தத்தை நிறுத்திறியா என்று டென்சனாவாள். ஏய் அது தெரு முக்கு வீட்டுல இருந்துடி என்றதும் தான் அமைதியாவாள்.

ஆனால் பேச்சிக்கிடையே கொடுக்கு இச்ச் சத்தம் மட்டும் கேட்காது.
கேட்டிச்சா என்று கேட்டாலும் சிணுங்கி கொண்டே போடா ஒன்னும் கேட்கலை, நாளைக்கு ஸ்கூல்ல இன்ஸ்பெக்ஷன் தூங்கனும் என்றபடியே கட் செய்வாள்!

******************************************************************************************************

பசியில பத்தும் பறக்குமாமே?

அந்த பத்து ஐ லவ் யூ & ஐ மிஸ் யூ இருக்கா இல்லையா!

காலங்காத்தாலேயே சண்டைப்போட்டா நான் என்ன செய்வேன்!

******************************************************************************************************

ஷேர் ஆட்டோவில் என் எதிர் இருக்கையில் அமர்ந்த 3 பெண்களுக்கும் ஷக்தியின் பிம்பத்தை மாட்டிவிட்டு ரசித்துக்கொண்டே பயணம் செய்தேன்.

எதேச்சையாக அருகில் அமர்ந்திருந்த சக பயணியின் கண்ணை பார்த்தேன்.

உடனடியாக அந்த பெண்களிடமிருந்து ஷக்தியின் பிம்பத்தை துடைத்துவிட்டேன்!

ச்சே இந்த ஷேர் ஆட்டோல போறவங்க ஒருத்தன் பார்வையும் டீசன்டாவே இல்லை!

******************************************************************************************************

ஹேய் என்னடா பண்ற, இங்க சாரல் அடிக்குது!

கதவை சாத்திக்கோ!

க்ளைமேட் ரொம்ப சில்லுனு குளிரா இருக்கு

ஸ்வெட்டர் போட்டுக்கோ!

உன்னை இப்பவே பார்க்கனும் போல இருக்கு!

அச்சச்சோ ஆபிஸ்ல இருக்கேனே

அப்படியே கட்டிப்பிடிச்சிகனும் போலிருக்கு

இரு லீவு போட முடியுதானு பார்க்கிறேன்

அப்படியே உன் மேல சாஞ்சிக்கிட்டு...

5 மினிட்ஸ்ல கிளம்பிடறேன்!

ஒன்னும் தேவையில்லை. ஐ லவ் யூ இத சொல்லதான் கூப்பிட்டேன். நைட் எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருந்தேன் டயர்டா இருக்கு. என் டெடியை கட்டிப்பிடிச்சிட்டு தூங்கப்போறேன் டாடா!

ம்ம்ம் நான் பொம்பளை டெடிபியரை கட்டிப்பிடிச்சிக்கிட்டு தூங்கினா நல்லாவா இருக்கும்!

No comments:

Post a Comment