Monday, September 26, 2011

11G/11H/12G பயணியின் பயணக்குறிப்பு - 5

பேச்சினூடே கெட்ட வார்த்தைகளை இடை இடையே துப்பிக்கொண்டே இருந்தார்கள் இரண்டு சக பேருந்து ப்யணிகள்.
அவர்கள் இருவருக்ள்ளாகத்தான் இந்த பரஸ்பர துப்பல்கள் என்றாலும்
சாரல் அடிப்பது போன்ற பிரம்மையால் நெளிந்து கொண்டிருந்தேன்..
இத்தனைக்கும் அவர்கள் கோபமாக திட்டிக்கொள்ளவில்லை
கெட்ட வார்த்தைகளின் வரலாறு தெரியாவிடினும் என்னிடம் கெட்டவார்த்தை
அறிமுக பரிச்சையமானது ஆறாம்வகுப்பிலிருந்து..
முதன் முதலில் பயன்படுத்திய வார்த்தை கெட்டவார்த்தைகளின் அகரமாக விளங்கும்
“மவனே” என்ற சொல். மேலோட்டமாக இது கெட்டவார்த்தையாக தெரியாமலிருப்பதால்
இந்த வார்த்தைகளை பயன்படுத்தினேன்.
“மவனே கம்ம்னு இரு”
“மவனே எங்கிட்ட வச்சிக்காத”
“மவனே So and So" Etc...
ஒரு நட்பு இந்த வார்த்தைகள் மூலம் நீ அவர்களின் தாயை காயப்படுத்துகிறாய்
என்று சொன்னது இந்த வார்த்தையை நிறுத்திக்கொண்டாயிற்று....
7-8ம் வகுப்புகளில் கெட்ட வார்த்தைகள் புழக்கம் வைரஸ் போல் பல்கி
பெருக ஆரம்பித்திருந்தது. பொதுவாக தாய், சகோதரிகளை நேரிடையாக திட்டும் வார்த்தைகள்
கடும் கோபத்தின் போது பயன்படுத்தப்படும். கடும் கோபத்தின் விளைவாக கடுஞ்சண்டையும் ஏற்படும்.
இது போக பலர் பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் கொச்சைவடிவ பெயர்களுடன் சாதாரண
கடுஞ்சண்டைக்கு வித்திடாத சாதுவான வசவுகளை இணைத்தும் ஏசும் வார்த்தைகள்
அதிகமாக உருவாக்கினார்கள் அல்லது கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள்.
காலப்போக்கில் மேற்கண்ட ஒட்டுமுறை கெட்ட வார்த்தைகள் மிக சாதாரணமாகி,
”என்னப்பா நல்லாயிருக்கியா” போன்று மிக இயல்பாகிப்போய்விட்டது.

(11G/11H/12G பயணியின் பயணக்குறிப்பிலிருந்து)

No comments:

Post a Comment