Saturday, December 31, 2011

ஜெ.ஜெ சில குறிப்புகள் - 7

ரெட் சினிமா தயாரிப்பில் இருந்த சமயம்.

நான் மொட்டை போடாமல் முழுவதுமாக ட்ரிம் பண்ணியிருந்தேன்.
யாரோ ரெட் அஜித் போல இருக்கேனு சொன்னதும் நெற்றியில் குங்குமம்
வைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்.


அப்போலாம் நாங்க கிரிக்கெட் ஊருவிட்டு ஊரு போயி பெட்மேட்ச் போடுவோம்.
எப்பவுமே 11பேரு சிக்கமாட்டாங்க. 2,3 பேரு குறையும். என் ப்ரண்ட் எதோ வேற டீம்ல இருந்து
2,3 பேரை இது போன்ற பற்றாகுறையின் போது கூட்டிட்டு வந்தான்.

மேட்ச் ஆடிட்டு வரச்சே பேசிட்டு வந்தோம். என் ப்ரண்ட் அவங்கிட்ட
நான் தீவிர அஜித் ரசிகன்ன் அதான் மொட்டை போட்டீருக்கானு சொல்ல
அவர்கள் அதை மைண்ட்ல வச்சிக்கிட்டாங்க போல.

பலமுறை அவங்க டீம்ல ஆள்குறையும் போது என்னைக்கூப்படுவாங்க.
ஒரு நாள் மாலை நேரத்தில் ஆரம்பித்தார்கள் டெர்ரர்ராக
நாம அஜித் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமா என்று.



முகவரி தவிர வேற அஜித்படமே நான் போனதில்லை அப்போ.
அதுவும் அந்த படங்களையும் முதல் நாளில் இல்லை முதல் வாரத்தில்
கூட சென்றதில்லை.

அதுக்கப்புறம் ராஜா, ரெட், சிட்டிசன் எல்லாம் முதல் நாள் முதல் ஷோ போனது வேற கணக்கு.

இதெல்லாம் அவர்களுக்கு தெரியாததாலும் மொட்டை போடுறளவுக்கு
தீவிர ரசிகன் என நினைத்ததாலும் என்னிடம் இந்த யோசனையை வைத்தார்கள்.

வாயில் விளக்கெண்ணெய் வைத்துக்கொண்டு துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
ம்ம் ம்கூம் சொல்லாமலிருந்தேன். அவர்களாகவேதான் தொடர்ந்தார்கள்.


நம்ம எனிமி டீம் சங்கரு டீமில்லப்பா அதான்பா போனவாட்டி
அம்பயரிங்ல போங்கு பண்ணி ஜெயிச்சாங்ல அவுனுங்க.
அவனுங்க விஜய் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிட்டானுங்க.


அவனுங்க ஏரியால பெரிசா பேனரு கட்டி தலைவரு, செயலாளரு
அப்பிடி இப்படினு போட்டோ போட்டிருக்கானுங்க.
பிகருங்க முன்னாடி பயங்கரமா சீன் போடுறானுங்க.

நாம அஜித் ரசிகர் மன்றம் ஆரம்பிப்போம் என்னா சொல்ற அப்படினு கேட்டுத்தொலைக்க
நான் நாம ரஜினி மன்றம் ஆரம்பிப்போமே என்றேன் கிண்டலாக

அதற்கு அவர்கள் மிக சீரியஸா பதிலளித்தார்கள்.

இப்பலாம் ரஜினி மன்றம் ஆரம்பிக்க அனுமதி இல்லையாம்பா.
முத்து ரசிகர் மன்றம்தான் கடசீயாம். அதுமில்லாம அவரு நடிக்கிறதில்லேல்லே.

அப்போ எங்கிட்ட செல்போன் இல்லே இருந்திருந்தா
ஹலோ... அப்பா வந்துட்டேம்பா.. பக்கத்துலதான் இருக்கேன்
5 நிமீசம் அப்படினு வராத போன்ல பேசி வீட்ல
கூப்பிட்டாங்கனு எஸ் ஆகிருப்பேன்.


அடுத்ததா நீதான் தலைவர் என்னா சொல்ற எனும்போதே இவர்களிடம்
கொடுத்த என்னோட ப்ரண்ட் கிரிக்கெட் பேட்டை வாங்கிட்டு எப்படியாச்சும்
எஸ் ஆகனும் என்பதே சிந்தனையில் ஒடிக்கொண்டிருந்தது.


அவனுங்க 5அடிக்கு 5அடிதான் போர்டு வச்சிருக்கானுங்க
நாம 10 அடி வைக்கனும். நம்ம போட்டோலாம் பெர்சு பெர்சா போடனும்.
அவனுங்க பார்த்தா அள்ளு இருக்க கூடாது என்றான் அவன்.

அகில உலக இதிகாசம் (அப்ப தயாரிப்பில் என்றார்கள் இதை, அப்புறம் நின்னு போச்சி போல) அஜித் ரசிகர் மன்றம்
என்ற பெயர் சிபாரிசிக்கப்பெற்று நற்பணிமன்றமாக இமிடியட்டாக மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கான தலைமை ரசிகர் மன்றம் தொடர்பு கொள்ளும் பணியை பிரபு என்பவனிடம்
ஒப்படைக்கப்பெற்றது. அவனது தந்தையார் அரசு போக்குவரத்தில் உள்ளவர்.

அதனால் அவனுக்கு சென்னை சென்று வருவது இலவசம் என்பதால் அவனிடம் ஒப்படைக்கப்பெற்றது.
ரசிகர் மன்றம்ல இருக்கவங்களுக்கு டிக்கெட்டு, அஜித் படம்போட்ட டிசர்ட் ப்ரீயா கொடுக்கனும்
என்பது மாரிமுத்துவின் கோரிக்கை. இலவசம் என்றதும்தான் எனக்கு மூச்சே வந்தது.

அதும் கொஞ்ச நேரம்தான்.

என்னை தலைவன் என்றவன் கட்டளையிடும் விதமாக எல்லாரும்
மாசம் 100ரூ சந்தா கட்டணும். சினிமா வந்தா கட்டவுட் பேனர் செலவுக்கு
அதை யூஸ் பண்ணனும் என்றான்.

தலைவர், பொருளாளர், செயலாளர் போன்ற 8 பொறுப்புகள் உட்பட 30பேர் தேருவார்கள்
30*100=3000*12=36000 என்பது அவனது கணக்கு.

தல எப்படியும் வருசம் 2 படம் நடிக்கும் படத்துக்கு 18000ரூ. என்னா சொல்ற நீ? என்று கேட்டதும்
சென்ற முறை ஆளுக்கு 50ரூ என 500ரூ பெட் மேட்ச்ல் (மிச்சம் 50ரூ பந்து வாங்கனும்) தோற்ற பின்னர்
எதிரி டீமுக்கு (எங்களை ஜெயித்தவர்கள் எல்லாரும் எதிரிகள்தான்) பெட் காசு 50ரூ தர சுதன் மறுத்ததால்
அவனுடைய பேட் உடைக்கப்பட்டதுதான் நியாபகத்திற்கு வந்தது.

டபுள் ஓகே என அன்னிச்சை செயலாக வார்த்தை வந்தது.
என் ப்ரண்ட் பேட் 2000ரூ என சொல்லியிருந்தது நியாபகத்திற்கு வந்ததும் ஒரு காரணம்.


திட்டத்தின் இறுதிவடிவம் அடுத்தவாரம் என ஒத்திப்போடப்பட்டது.

இதுதான் சமயம் என்று அடுத்த நாளே எதேதோ காரணம் சொல்லி அவர்களிம்
இருந்து வாங்கி நண்பனின் மட்டையை அவனிடமே சேர்பித்து விட்டேன்.

அடுத்த வாரம் முன்னரே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு கம்பெனியில்

வேலை கிடைத்து உடனடியா சென்றும் விட்டிருந்தேன்.
அதன் பின் அவர்களது தொடர்பும் முழுவதுமா நின்று போனது.


7,8 வருடங்களுக்கு பின்னர் அந்த விஜய் நற்பணி மன்ற பேனர் இருந்த இடத்தில்
தனுஷ் ரசிகர் மன்ற பேனரும், அஜித் ரசிகர் மன்ற பேனர் வைக்கலாம் என்ற இடத்தில்
சிம்பு மன்ற பேனரும் இடம் பிடித்திருந்தன.


ஓவ்வொரு பேனர்களிலும் பத்துபத்து இளைஞர்கள் செயற்கை சிரிப்புடனும்,
சிரிப்பதாக நினைத்து பல்லை கடித்துக்கொண்டு முறைத்துக்கொண்டுமிருந்தனர்.


(சேரமான் வில்லனின் ஜெ ஜெ சிலகுறிப்புகள் என்ற புத்தகத்தின் 13வது அத்தியாயத்திலிருந்து)

1 comment:

  1. என்னோடதுதான் முதல் பின்னூட்டமா? உன்னை என் தம்பின்னு சொல்லிகவே பப்பிசேம்...

    ReplyDelete